ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளராகும் மேர்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் கதிர்காமம் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கதிர்காமம் தொகுதியின் அமைப்பாளராக பதவியேற்க உள்ளதால், மேர்வின் சில்வா, கதிர்காமத்தில் தனது செயற்பாடுகளை அதிகரித்துள்ளார். அத்துடன் மேர்வின் சில்வா அண்மையில் கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்த மேர்வின் சில்வா, அண்மைய காலமாக மகிந்த உட்பட ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து வருவதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers