ஜே.வி.பிக்கும் ஐ.தே.கவிற்கும் இடையில் இணக்கம்

Report Print Kamel Kamel in அரசியல்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் ஜே.வி.பி கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து கருத்து வெளியிட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் நாடாளுமன்றில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

நிறைவேற்று அதிகார முறைமை ரத்து தொடர்பிலேயே இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதற்காக ஜே.வி.பி 20ஆம் திருத்தச் சட்டமொன்றை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers