தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர்!

Report Print Rusath in அரசியல்

காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்குரிய அழைப்பிதழிலே தமிழ் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. என சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனை இன்று தொடர்பு கொண்டு வினவிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் எம்மிடம் தொடர்பு கொண்டு அந்த தவறுக்காக எம்மிடம் மன்னிப்புக்கோரி, அழைப்பிதழில் எனது புகைப்படமும், எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் புகைப்படத்தையும் பிரசுரித்து, அந்நிகழ்வில் எமக்கு உரையாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயத்தில் தவறு நடைபெற்றிருக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் எம்முடன் பலமுறை பேசியிருக்கின்றார். எம்மையும் அழைத்து தான் அந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள். எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers