வில்பத்து வன அழிப்பு சம்பந்தமாக சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வில்பத்து விவகாரம் நிச்சயமாக அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கட்டியெழுப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு சிறுபான்மை இன மக்களின் ஆதரவு இல்லை என அரசாங்கம் திடீரென கூற ஆரம்பித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற முடியாது என அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்கம் ஒரு முறைப்படுத்தலின் கீழ் இனவாதத்தை பரப்பி வருகிறது. இதனுடன் வில்பத்து வன அழிப்பு தொடர்பான பிரசாரங்களை ஒப்பிடும் போதும் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இன மத பேதமின்றி அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்துள்ளனர் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.