நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க ஐ.தே.கட்சியும் ஜே.வி.பியும் கொள்கை ரீதியில் இணக்கம்!

Report Print Athavan in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த இணக்கப்பாடு தொடர்பாக அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளின் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றதுடன் பிரதமரும் அதில் கலந்துக்கொண்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பதற்காக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத், நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துக்கொண்டனர்.