மகிந்த தரப்பில் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளர் உறுதியாகவில்லை! வாசுதேவ

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளார் யார் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக களமிறக்குவோம். அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றமை அவரவர் தனிப்பட்ட கருத்துக்களாகும். இன்னமும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளார் யார் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

Latest Offers