அமைச்சர் ரிசாத் மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை: ஜோன் அமரதுங்க

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எமது அரசாங்கத்தில் வில்பத்து வனப் பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் இதுவரை வழங்கவும் இல்லை என வனப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. ஏனெனில், எமது அரசாங்கத்தில் அவருக்கு வில்பத்து வனப் பகுதி இடத்தில் எதனையும் வழங்கவில்லை.

நான் வனப் பகுதியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் என்னிடம் வில்பத்து வனப் பகுதியிலிருந்து முஸ்லிம்களுக்கு விடுவித்துத் தருமாறு கேட்கவும் இல்லை. கேட்டாலும் நாம் வழங்கப் போவதுமில்லை.

வில்பத்து வனப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாருக்கும் வழங்கப் போவதில்லை. கடந்த அரசாங்க காலத்திலேயே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள என்றார்.

Latest Offers