அரசாங்கத்தில் ஆட்சியை பெறாவிட்டாலும் ஆதரவினை வழங்கியுள்ளோம்! யோகேஸ்வரன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி ,கமத்தொழில் சார்ந்த இராஜாங்க அமைச்சர் தமிழ் பகுதிகளில் காணப்படும் 74 வீத தமிழ் தரப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

குறித்த அமைச்சின் ஊடாக தமிழ் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்திட்டங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் ஆட்சியை பெறாவிட்டாலும் ஆதரவினை வழங்கியுள்ளோம். எனவே எமது மக்களுக்கு தகுந்த உதவிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் மீனவர்களின் வீட்டுத்திட்டம், வீதி புனரமைப்பு, தொழிற்சாலைகள் மீள கட்டியெழுப்புதல், கால் நடைகளின் உயிரிழப்பிற்கான இழப்பீடு என்பனவற்றினையும் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers