மொத்த உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடைசியில் உள்ளன

Report Print Vamathevan in அரசியல்

முழு நாட்டின் மொத்த உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்னமும் கடைசியாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

முழு நாட்டின் மொத்த உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்னமும் கடைசியாகவே உள்ளன. அதில் விவசாய உற்பத்தியிலும் கடைநிலையே.

ஆனால் எம்மில் 40 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். யுத்தத்தின் இழப்புக்களும், ஆளணி பற்றாக்குறையும் அக்காலத்தில் ஏற்பட்ட அபிவிருத்தி இடைவெளிகளுமே விவசாயத்துறையின் வீழ்ச்சிக்கு காரணங்களாகின.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மாகாண மற்றும் மத்திய விவசாய அமைச்சின் ஆளணி 30 சதவீதத்திற்கு குறைவாகவே இயங்கி வருகின்றது.

யுத்த காலத்தில் ஏற்பட்ட கல்வி வீழ்ச்சி இத்துறையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்ப தேவையான தகைமைகள் எம் இளைஞர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றது.

இத்தகைமைகளை பெற பரந்தன் விவசாய கல்லூரி யுத்தத்தின் பின் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் இன்னும் அரைகுறையான வசதிவாய்ப்புடனே இயங்கி வருகின்றது.

முழுமையாக இக் கல்லூரியை மீள் அபிவிருத்தி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்த அரசாங்கம் தவறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Latest Offers