மீண்டும் தேசிய அரசாங்கம் - மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி?

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவருக்கும் இடையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கம் மீண்டும் அமைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது.

இது தொடர்பான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையை அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கடந்த வாரம் உலங்குவானூர்தியில் பயணித்த முக்கியஸ்தர் ஒருவர் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகும் நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers