பொது மக்களுக்கு அமைச்சர் ராஜித விடுத்துள்ள மகிழ்ச்சிகர செய்தி

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் நாட்களில் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜா எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக 07 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers