தூக்கு தண்டனை அமுல்படுத்தப்படமாட்டாது?

Report Print Steephen Steephen in அரசியல்

பௌத்த சமய நூலான திரிபீடகத்தை தேசிய உரிமையாக அறிவித்ததால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரிபீடகத்தை தேசிய உரிமையாக்குவதற்கு பதிலாக அதனை நெருக்கமானதாக மாற்றியிருக்க வேண்டும்.

திரிபீடகத்தை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளித்து, மாணவர்களுக்கு வழங்கி சங்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும்.

அதனை விடுத்து, ஜனாதிபதி பலனளிக்காத நடவடிக்கையை செய்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தூக்கு தண்டனையை அமுல்படுத்த போவதாக ஜனாதிபதி கூறுவது மற்றுமொரு வாய் வார்த்தை மட்டுமேயன்றி அது செயற்படுத்தப்படாது என்றும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers