ரணில், மைத்திரியின் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 7500 பேரை சேவையில் இணைத்து கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவை இணங்கியிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கான யோசனையை முன்வைத்தார். இதற்காக க.பொ.த உயர்த்தரத்தில் சித்தி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 15000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும்.

இதேவேளை நாடு முழுவதும் 1000 சிறிய பாலங்களை அமைக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 2020ஆம் ஆண்டில் இதன் பணிகள் முடிவடையவுள்ளன.