எனது கணவரின் நிலை என்ன? முன்னாள் போராளியின் மனைவி வெளியிடும் பகீர் தகவல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எனது கணவர் எழிலன் காணாமல் போகவில்லை, எனது கணவரை சரணடையும் பொருட்டு நானே இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன், என் கனவரை யாரும் காணாமல் போனவர் என கூறமுடியாது என வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எனது கணவர் காணாமல் போகவில்லை. எனது கணவரை சரணடையும் பொருட்டு ராணுவத்திடம் நானே ஒப்படைத்தேன். அவருடன் எனது மூன்று பிள்ளைகளையும் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைத்தேன். எனவே, எனது கணவரை காணாமல் போனவர் என யாரும் கூற முடியாது.

இலங்கை அரசு மட்டுமன்றி, யுத்தத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும், எனது கணவர் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் வரை, சரணடைந்தவர்கள் தம்மிடம் இருக்கின்றனர் என்றும், அவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்குப் பின்னர் எப்படி எனது கணவர் இல்லாமல் போக முடியும்?

அப்படி இல்லாமல் போயிருந்தால், அவ்வாறு இல்லாமல் போகச் செய்தவர்கள் யார்? அதற்கு எவர் கட்டளையிட்டார் என்பது பற்றிய விபரங்களை அரசாங்கம் எமக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers