சந்திரிக்கா மற்றும் மகிந்தவை இரகசியமாக தனித்தனியாக சந்தித்த மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரை இரகசியமான முறையில் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக அரசியல் துறையில் கருத்துக்களும் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 17ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்புகளில் அரசியல் விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நடந்த அரசியல் மாற்றத்துடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளிக்கு பின்னர், ஜனாதிபதி சிறிசேன முதல் முறையாக சந்திரிக்காவை தனிப்பட்ட ரீதியாக சந்தித்து பேசியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை வலுப்படுத்துவது, எதிர்காலத்தில் நடக்கும் தேர்தல் சம்பந்தமாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Latest Offers