ஊடகங்களுக்கு வரையறையற்ற சுதந்திரம் கிடைத்துள்ளது - மனுஷ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் இருப்பதாகவும் ஊடகங்களுக்கு தற்போது வரையறையற்ற சுதந்திரம் கிடைத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கலந்துரையாடப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் நாட்டில் பெரிய பணியை செய்து வருகின்றன. மக்கள் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் கோரினார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஊடகங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. வரையறையற்ற சுதந்திரம். ஊடகவியலாளர்கள் செய்ய வேண்டிய மாற்றங்களை ஜனநாயகமாக செய்கின்றனரா?. அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமைகளை பெற முடிந்தது. ஊடக சுதந்திரத்துடன் ஊடக ஒழுங்கு நெறி பற்றி பேச வேண்டும். சுய தணிக்கையின் கீழ் இலத்திரனியல் ஊடகங்கள் செயற்பட வேண்டும்.

இலத்திரனியல் அலைகள் மக்களுக்கு சொந்தமானவை. அதனை வர்த்தகர்கள் தமக்கு தேவையான வகையில் பயன்படுத்த முடியாது. பேஸ்புக் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அதனை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers