மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்: ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

அனைவருக்கும் சொந்தமாக காணி உரிமையை வழங்க வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற 7 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நாங்கள் ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுத்தோம். தற்போது பிரதான பணியாக காணி உரிமைகளை வழங்கி வருகின்றோம்.

இதன் பின்னர் நாங்கள் கொண்டு வரும் புதிய சட்டத்தின் மூலம் உங்கள் அனைவருக்கும் சொந்தமாக காணிகளை வழங்குவோம்.

பயிர் செய்யும் காணிகளின் உரிமையை வழங்குவோம். மக்கள் அனைவரும் வீட்டு உரிமையை வழங்கி வருகிறோம். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு கிராமங்களிலும் நகரங்களிலும் மலையகத்திலும் வடக்கு, கிழக்கிலும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

13 வருடங்கள் கல்வியை கட்டாயமாக்கியுள்ளோம். அதேபோல் டிஜிட்டல் மயப்படுத்ததலின் உரிமையை வழங்கியுள்ளோம். தற்போது அனைத்து வீடுகளிலும் செல்போன்கள் உள்ளன.

பொருளாதாரமும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. டிஜிட்டல் மயமாகும் இடமே அபிவிருத்தியடையும். எவருக்காவது டிஜிட்டல் அறிவு இல்லை என்றால், அவர் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவார்.

கிராம மட்டங்களில் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்த உள்ளோம். அத்துடன் எந்த சமயத்தை பின்பற்றும் உரிமை தற்போதுள்ளது.

கலாசாரத்தை கடைபிடிக்கும் உரிமையுள்ளது. இந்த உரிமைகள் அனைத்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம். வேறு யார் உரிமைகளை கொடுத்தனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கமே இந்த உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை பாதுகாத்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers