இவர்களிடம் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்: நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காட்டம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க இணங்கிவிட்டு 2018ஆம் ஆண்டு அதனைச் செய்யமாட்டொம் என்று பின்வாங்கியவர்களிடமி்ருந்து நீதியை எதிர்பார்ப்பது இந்த நாட்டு மக்களுடைய முட்டாள்தனமான விடயமாகத் தான் இருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

இந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு உண்மையை எதிர்கொள்வதற்கு திராணி கிடையாது. கடந்த 2015ஆம் ஆண்டில் போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க இணங்கிவிட்டு 2018ஆம் ஆண்டு அதனைச் செய்யமாட்டொம் என்று பின்வாங்கியதுடன். அதன் மூலம் நாட்டின் சுயாதீனம் காக்கப்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர்.

இத்தகையவர்களிடமி்ருந்து நீதியை எதிர்பார்ப்பது இந்த நாட்டு மக்களுடைய முட்டாள்தனமான விடயமாகத் தான் இருக்கும்.

மகிந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஒரு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. அதற்கு வடக்கு கிழக்கிலிருந்து ஒரு தமிழ் ஊடகவியலாளர் கூட விண்ணப்பிக்கவில்லை என்பதிலிருந்தே இந்த அட்சியின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை புலப்படுகிறது.

வடக்கு கிழக்கில உள்ள ஊடகவிளலாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் இழப்பீட்டுக்ககாக விண்ணப்பிக்க விரும்பவில்லை. அந்த இழப்பீட்டுக்கான மதிப்பீடுகள் கூட கேலிக்குரியவையாகவே இருக்கின்றன.

வடக்கு கிழக்கில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டதற்கு பொலிஸார், படையினர் மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்கள் மீதே குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன என்றார்.

Latest Offers