அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனில் ஐ.நாவின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனில் ஸ்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் நிலவிய போது எவ்வித அக்கறையும் காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் தற்போது யுத்தம் முடிந்த பின்னர் அக்கறை காட்டுகின்றது.

அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்கள் சுமூகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றிய தலையீடாகவே இது அமைகிறது.

மேலும் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து பிரித்தானியாவால் சமர்ப்பிக்கப்பட்ட 40/1 தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு இன்னும் இரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போதைய தலையீடானது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு என்றே கருதவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers