கோத்தபாய களமிறங்கினால் பசில் ராஜபக்ச பிரசார மேடைகளில் குதிப்பார்! தேர்தல் திட்டங்கள் தயார்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பசில் ராஜபக்சவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளராக களமிறங்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் எதற்கும் தயார் என கோத்தபாய ராஜபக்ச நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பசில் ராஜபக்சவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததன் பின்னர், மூன்று மாதங்களுக்குள் புதிய ஒரு கட்சியை உருவாக்கித் தேர்தலில் போட்டியிட்டு பாரிய வெற்றியை பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டது.

340 பிரதேச சபைகளில் 231 சபைகளைப் பொதுஜன பெரமுன வெற்றிகொண்டது.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதன் பின்னர் இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் 12 தேர்தல்களுக்குப் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக செயற்பட்ட பசில் ராஜபக்ச அதில் 11 தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளார்

இதற்கமைய 2010 ஜனாதிபதி தேர்தல், 2008, 2009, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல், 2006, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரதேச சபை தேர்தல்களில் பசில் ராஜபக்ச பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers