ஏனைய மதங்களுடன் இந்து மதத்தை ஒப்பிடுகையில் பலவீனமாக உள்ளது! மனோ

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய இந்து மகா சபை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வட கொழும்பு இந்து பரிபாலன சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடரபில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளோம். கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒரு பொறிமுறை வேண்டுமென்ற அடிப்படையிலே நாட்டில் இலங்கை தேசிய இந்து மகா சபையை அமைக்க இருக்கின்றோம்.

மேலும் இந்து கலாசார அமைச்சருக்கு ஒரு ஆலோசனைக் குழுவொன்றினையும் அமைக்கவுள்ளோம்.

இந்து அறங்காவலர்கள், மதத் தலைவர்கள், இந்துக் கல்லூரிகள், அறநெறி பாடப் பொறிமுறை ஆகிய அனைத்தையும் உள்வாங்கி கட்டமைத்தே இந்த தேசிய மகா சபை அமைக்கப்படவுள்ளது.

ஏனைய மதங்களுடன் எமது இந்து மதத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது பலவீனமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers