ஜெனிவா கூட்டத் தொடரில் முரண்பட்ட சரத் வீரசேகர நாடு திரும்பியதும் சொன்ன பதில்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடத் தேவையில்லை என இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 40 ஆவது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று இலங்கையின் அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கியுள்ள அவர்,

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாத நிலையில் இணை அனுசரணை வழங்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை சட்டத்திற்கு முரணானதாகும். எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு வெகு விரைவில் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரின் போது எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடத் தேவையில்லை. அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து விலகும்படி வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

தற்போது 40(1) தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதனூடாக பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இருவருட காலஅவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers