மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவினால் உண்டான முக்கிய பிரச்சினை! கோத்தபாய விளக்கம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
203Shares

நாம் அன்று நாட்டின் அபிவிருத்தி குறித்து கதைத்துக் கொண்டிருக்க வில்லை. செய்து காட்டினோம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொட்டிகாவத்தைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற “எளிய” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

னாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்படும் போட்டித் தன்மை நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லை என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும், அரசியல் ஸ்தீரத் தன்மையில்லாத ஒரு நிலையில் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது.

இன்று எமது நாட்டில் அரசியல் ஸ்தீரத் தன்மையில்லை என்பதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். நாம் அன்று நாட்டின் அபிவிருத்தி குறித்து கதைத்துக் கொண்டிருக்க வில்லை. செய்து காட்டினோம்.

எதிர்வரும் காலத்திலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை செய்து காட்டத் தயாராகவுள்ளோம் என்றார்.