உத்தரவிட முடியாது! ஜெனிவா சென்று திரும்பிய வடக்கு ஆளுநர் அதிரடிப் பேச்சு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை அரசாங்கம் ஜெனிவாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்த தவறிவிட்டது என்று குறிப்பிடும் தரப்பினர் சர்வதேச நீதி பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் கொழும்பு கிளை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது ஜெனிவா சென்றுவந்த அவர் அது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசினார்.

இலங்கை அரசாங்கம் ஜெனிவாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்த தவறிவிட்டது என்று குறிப்பிடும் தரப்பினர் சர்வதேச நீதி பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும்.

எமது நாட்டின் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையில் இருந்து நீதித்துறையின் தனித்தன்மை பேணப்பட்டுள்ளது.

ஆகவே சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கும் முயற்சிகள் சாத்தியமற்றது. பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றப்படும். இதற்கு எத்தரப்பினரும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது. இலங்கையராகிய நாமே நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எமக்கேற்ற வகையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

You my like this video


Latest Offers