கடனை விட அதிக தொகைக்கு விற்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வாங்கிய கடனை விடவும் அதிக பெறுமதிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது ஆட்சியில் 840 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியில் உருவாக்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை வெறும் நீச்சல் தடாகம் என விமர்சித்த பிரதமர் அதே துறைமுகத்தை 1.2 பில்லியனுக்கு விற்றுள்ளார்.

வாங்கிய கடனை விடவும் அதிக பெறுமதிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டுள்ளது. ஆகவே எமது அரசாங்கம் பெற்ற கடனை செலுத்த வேண்டியதில்லை.

எமது நாட்டின் அபிவிருத்திகள் அனைத்துமே துறைமுகங்களை சார்ந்தே உள்ளது. சிங்கபூர், துபாய் போன்ற நாடுகள் வளர்ச்சியடைய துறைமுகங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டமையே காரணமாகும்.

அதனை உணர்ந்தே எமது தலைவர் மகிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டை துறைமுகத்தை புனரமைத்தார் என்றார்.

Latest Offers