எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக ராஜபக்ச ஒருவரே போட்டியிடுவார்

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக ராஜபக்ச ஒருவரே போட்டியிடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் ஆறு ஏழு மாதங்களில் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும், அந்த தேர்தலில் நிச்சயமாகவே ராஜபக்ச ஒருவர் போட்டியிடுவார்.

இந்த அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி எமது ஆட்சிக்காலத்தில் 8 வீதமாக காணப்பட்டது.

தற்பொழுது அந்த வீதம் நான்காக வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து போட்டியிடுவதனை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை.

எனினும் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் என லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.