தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம்! வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பு வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது, 2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறியுமாறும் அதாவது நோய்க்கான காரணத்தை கண்டறிந்தால்தான் நோயை தீர்க்க முடியும் எனவே இராணுவத்திடம் சென்று ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டறியுமாறும் தெரிவித்த ஆளுநர், காணிக்கான ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்றும் கோரினார்

இதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம்,

இறுதி யுத்தம் காரணமாக பொது மக்கள் தங்களது உயிர்களை பாதுகாக்க முடியாது சூழல் காணப்பட்டது. பெரும்பாலான பொது மக்கள் தங்களின் சொந்த ஆவணங்களை கூட இழந்திருந்தனர்.

எனவே நாமும் குறித்த காணிக்கான ஆவணத்தையும் இழந்திருந்தோம். அத்தோடு அன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலார்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதனை சுட்டிக்காட்டிய போதே ஆளுநர் தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என பதிலளித்தார்.