கொலைகாரன் கோத்தபாய! சிறீதரன் காட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒரு கொலைகாரன், அவர் ஜனாதிபதியாக வருவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொலை செய்து இந்த மண்ணில் பெரிய இனப்படுகொலையை நடத்திய கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நிற்கிறார்.

ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவை கோத்தபாய முதலில் விடவேண்டும். அந்தக் கொலைகாரன் ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.