உண்டியலில் போடும் பணத்திற்கு வரி அறவிடும் அரசு

Report Print Steephen Steephen in அரசியல்

சமய வழிபாட்டு தலங்களில் உள்ள உண்டியல்களில் போடப்படும் காணிக்கை பணத்திற்கும் வரி அறவிடும் அரசாங்கம் பற்றி பேசக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் வாழும் மக்களிடம் இருந்து அரசாங்கம் அதிகமான வரியை அறவிடுகிறது. சமய வழிபாட்டு தலங்களுக்கு கிடைக்கும் நிதி உதவிகளுக்கு அரசாங்கம் வரி அறவிடுகிறது.

அதேவேளை நாட்டில் உள்ள அனைவரும் சகல மதங்கள் குறித்து நல்ல புரிந்துணர்வை கொண்டிருக்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.