முற்றாக நிராகரிக்கிறேன்! எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது: மைத்திரி பேச்சு

Report Print Steephen Steephen in அரசியல்

சர்வதேசமோ வேறு எவரோ கூறுவது போல், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் சுயாதீனம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எதனையும் செய்ய தான் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை மீகாதென்ன பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கியுள்ள தவறான தகவல்களின் அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கில் இராணுவ கையகப்படுத்திய மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்கவில்லை எனவும் அதனை மேற்கொள்ள ஆணைக்குழு நியமிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் யோசனை முன்வைத்துள்ளார்.

அப்படியான ஆணைக்குழுவை நியமிக்க வேண்டிய எந்த தேவையும் ஏற்படவில்லை. மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள சரியானவற்றை ஏற்றுக்கொள்கிறோம். அவற்றில் உள்ள தவறான விடயங்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் என்ற வகையில் தயாரில்லை.

அத்துடன் மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை போன்று இணை பொறுப்பு கூறல் கொள்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்வதாக கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர், மனித உரிமை ஆணைக்குழுவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.