ராஜபக்சவினரின் ஆதரவின்றி மைத்திரியால் வெற்றி பெற முடியாது: மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமாயின் அவருக்கு ஆதரவாக ராஜபக்சவினர் அனைரும் இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ராஜபக்ச, நாமல் ராஜபக்ச என அனைத்து ராஜபக்சவினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேடையில் இல்லை என்றால், வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு.

தற்போதைய ஜனாதிபதிக்கு சிங்கள பௌத்த வாக்கு வங்கி குறைவாக இருக்கலாம். எனினும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என பேசப்படும் நபர்களில் தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க மக்களின் வாக்குகளில் அதிகளவான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதியினாலேயே பெற முடியும்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டால், எவரும் வெற்றி பெற முடியாது. இப்படி நடந்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

இதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி ஜனாதிபதி - மகிந்த பிரதமர் என்ற தொனிப்பொருளின் கீழ் போட்டியிட வேண்டும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.