தெரிந்து தான் சென்றோம்! காவல் துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த பாடகர்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மாக்கந்துர மதுஷின் விருந்துபசாரமொன்றுக்கு பாடல்களை பாடவே நானும் தந்தையும் சென்றோம். என்னிடம் அதனை சொல்லிவிட்டே தந்தை அழைத்துச் சென்றார் என கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாடகர் நதிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாடகர் நதிமால் பெரேரா தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த விசாரணையின் போது பதிலளித்துள்ள நதிமால் பெரேரா,

மதுஷின் நிகழ்வு ஒன்றுக்கு பாடல்களை பாடவே நான் சென்றேன். மதுஷின் நிகழ்வுக்கு செல்வதாக தந்தையார் என்னிடம் தெரிவித்தார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும் மதுஷின் வியாபாரத் தொடர்புகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இன்று காலை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாடகர் நதிமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், மேலதிக விசாரணைகளுக்கு அழைத்தால் சமூகமளிக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் விடுக்கப்பட்டார்.

இதேவேளை, சிறைச்சாலை அத்தியட்சகர் கோதாகொட ஆராச்சிகே லலித் குமார என்பவர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.