வடக்கு மக்கள் எனக்கு வாக்களிப்பார்களானால்...?? குமார வெல்கம

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டின் எந்த இடத்திலும் அரசியலில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு என நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொழும்பில் மாத்திரமின்றி நாட்டின் எந்த இடத்திலும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்களுக்கு அதிகாரம் உண்டு. அதேபோன்று எந்த இடத்திலும் அரசியல் செய்வதற்கு எமக்கும் அதிகாரம் இருக்க வேண்டும்.

வடக்கு மக்கள் எனக்கு வாக்களிப்பார்களாக இருப்பின் நான் வடக்கில் போட்டியிட முடியும். இலங்கை என்பது அனைவருக்கும் சொந்தமான நாடு. நாம் அனைவரும் இலங்கையர்கள்.

இலங்கையர் என்ற அடிப்படையில் எம அனைவருக்கும் இந்த நாட்டிற்குள் எங்கு வேண்மென்றாலும் செல்ல முடியும். அரசியல் செய்ய முடிய வேண்டும்.

கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதால் எமக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் மக்களே வாக்களிக்க போகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு நாம் தலைவணங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.