தெளிவாக வெளியே புலப்பட்டு நிற்கும் மைத்திரி மகிந்த அணியின் பிளவு!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதை தெளிவாக காணக் கூடியதாக இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இரண்டு கட்சிகள் இடையில் மோதல் நடந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நிறுத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விரும்பவில்லை. இதனால், இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.