மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐ.தே.கட்சி முயற்சிப்பதற்கான காரணம்?

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகார குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அணி ஒன்றுடன் இணைந்து மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க தயராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அளுத்கமகே,

எல்.என்.ஜீ. மின் உற்பத்தி நிலையத்திற்கான விலை மனுவை சீனாவுக்கு வழங்க இரகசியமான முறையில் செயற்பட்டமை, மின்சார உற்பத்திக்கு கொண்டு வரப்பட்ட 48 மின்பிறாப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தாமல் கைவிட்டமை உட்பட பல மோசடிகள் மூலம் அரசாங்கம் நாட்டுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.