ஜனாதிபதி வேட்பாளர் யார்? ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசியக் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 20வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தும் நோக்குடனேயே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சுமத்துகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.