ராஜபக்ச குடும்பத்திலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர்!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திலிருந்தே, வேட்பாளர் ஒருவர் தெரிவாகும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஆறு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “நாட்டில் கூட்டமைப்பு அமைக்கப்படும் சந்தர்ப்பங்களில், சிறுபான்மைக் கட்சிகள் பிரதான கட்சியுடன் இணைவதே வழமை.

இன்று பலமான எதிர்க்கட்சியாக நாம் இருக்கிறோம். அதனால், பொதுஜன பெரமுனவுடனேயே கூட்டமைப்போம். சின்னம் மொட்டாகவே இருக்கும்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் விரிசல் காணப்பட்டது. எனினும், தற்போது அத்தகைய நிலை இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.