மக்களின் காணிகளை விற்றுவிட்டு கொழும்பில் இருந்து வெளியேறிய கோத்தா!

Report Print Jeslin Jeslin in அரசியல்

கொழும்பை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்றுவிட்டு கொழும்பில் இருந்து வெளியேறியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்றுவரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேசம் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என்பதால்தான் 1994ஆம் ஆண்டுக்கு பிறகு அபிவிருத்தி எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக அந்த மக்களின் காணிகளை விற்று அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றும் திட்டமே மேற்கொள்ளப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.