அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Steephen Steephen in அரசியல்

வத்தளை - மாபோல நகர சபையின் காணி விற்பனை செய்யப்பட்டமை சம்பந்தமான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க இடையில் நாடாளுமன்றத்தில் இன்று வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு பேர்ச்சஸ் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 70 பேர்ச்சஸ் காணியை 13 லட்சம் ரூபாவுக்கு வத்தளை மாபோல நகர சபை விற்பனை செய்துள்ளது என நிமல் லன்சா குற்றம் சுமத்தினார்.

இதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தனது எதிர்ப்பை வெளியிட்டார். இதனையடுத்து குறைந்த விலைக்கு காணி விற்பனை செய்யப்பட்டமை உண்மை எனவும் இது தொடர்பாக சவால் விடுப்பதாகவும் லன்சா குறிப்பிட்டார்.

எனினும் காணி உரிய விலை மனு கோரியே விற்பனை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பாக கணக்காய்வு செய்யுமாறும் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்.