இதுவே எமது நிலைப்பாடு! சபையில் வெளிப்படுத்திய சம்பந்தன்

Report Print Jeslin Jeslin in அரசியல்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும், இதுவே எமது நிலைப்பாடு என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாகாண சபைக்கான உறுப்பினர்கள், மாகாண அரசாங்கம், மாகாண அமைச்சரவை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஜனநாயக ரீதியில் மக்களினால் நியமிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது ஜனநாயக ஆட்சியாக அமைய முடியாது.

மாகாண சபைக்கான உறுப்பினர்கள், மாகாண அரசாங்கம், மாகாண அமைச்சரவை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஆற்றக்கூடிய கடமைகளை ஆளுநர்களால் நிறைவேற்ற முடியாது.

எனவே, மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு வலியுறுத்துகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.