இதைவிடவும் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்படும்! மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

தமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமது ஆட்சிக்காலத்திலேயே மக்களுக்கு சிரமங்களில் இன்றி மின்சாரம் கிடைத்தது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் இருந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முற்றிலும் இது முகாமைத்துவ குறைபாடு மற்றும் தவறு.

கடந்த 2015 ஆம் ஆண்டு சம்பூரில் நிர்மாணிக்கப்படவிருந்த மின்சார உற்பத்தி நிலையத்தை அரசாங்கம் நிர்மாணிக்கவில்லை.

எமது ஆட்சிக்காலத்தில் இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. அதனை நிர்மாணிக்காததன் பாதிப்பை தற்போது அனுபவிக்கின்றோம். எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பு அதிகரிக்கும் எனவும் மகிந்த ராஜபகச குறிப்பிட்டுள்ளார்.