புலிகளின் தலைவர் பிரபாகரன் இழந்த உரிமைகள் மட்டுமே சர்வதேசத்திற்கு தெரியும்! மைத்திரி

Report Print Jeslin Jeslin in அரசியல்

சர்வதேச ரீதியில், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இழந்த மனித உரிமைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கை பொலிஸ் படையினர் தங்கள் உயிரை தியாகம் செய்து பெரும் பங்காற்றியிருந்தனர்.

இந்த நாட்டில் முப்பது ஆண்டுகால யுத்தம் இடம்பெற்றது, 1980ஆம் அண்டுகளின் நடுப்பகுதியில் 750இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இன்று மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் என்பன குறித்து பேசுபவர்களும், பிரதானமாக அரச சார்பற்ற நிறுவனங்களும் யுத்தகாலத்தில் பிரபாகரன் இழந்த மனித உரிமை குறித்து மாத்திரமே பேசுகின்றனர். மனித உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

சர்வதேசத்தின் ஊடாக வந்திருக்கும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு எமக்கு சேவை வழங்குவதற்காக வரவில்லை.

கடல் கடந்து இன்னும் செயற்பாட்டில் இருக்கும் விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு சேவை செய்யவே இவை அமைக்கப்பட்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.