இலங்கையில் தமிழ் - முஸ்லிம் இனக்கலவரம் ஏற்படும் ஆபத்து!! வெளியானது எச்சரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தனிப்பட்ட அரசியல் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு பிரச்சினையை உருவாக்குவதானது தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் சூழலை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இவ்விவாதத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மற்றும் பிரதி அமைச்சர் ஹரிஸ்ஸுக்கும் இடையில் வாக்குவாதம் நிலவியது.

இதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அனைவரும் இணக்கம் தெரிவித்த ஒரு விடயத்தில் பிரதி அமைச்சர் ஹரிஸ்ஸின் தனிப்பட்ட அரசியல் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு பிரச்சினையை உருவாக்குகின்றார். எல்லை நிர்ணய பிரச்சினை என ஒன்றும் இல்லை.

இச்செயற்பாடு எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றில் வந்தே முடியும் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கின்றேன். மனதில் வைத்துகொள்ள வேண்டும் என்றார்.