வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம்

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்கினால், அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் அல்லது எவருக்கும் வழங்கக் கூடாது எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.