யாழ்.மறைமாவட்ட ஆயருடன் வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்திற்கும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று முற்பகல் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன் போது யாழ்.மறைமாவட்ட மற்றும் வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்கர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட எஞ்சியுள்ள மக்களின் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு யாழ்.மறைமாவட்ட ஆயர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.