ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினை இல்லை! ஜனாதிபதி தேர்தலில் வெற்றி உறுதி: அகில விராஜ் காரியவசம் நம்பிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வியமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சி சார்பில் மகிந்த ராஜபக்ச குடும்பத்திலிருந்து பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என அண்மையில் மகிந்த தரப்பினர் தெரிவித்துவருகின்றன. வெற்றி பெறும் வேட்பாளரை களத்தில் இறக்குவேன் என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவப் பிரச்சினை என்று எதுவும் கிடையாது.

அடுத்த வேட்பாளர் யார் என்பது தொடர்பில் செயற்குழு கலந்தாலோசித்து முடிவெடுக்கும். இதன்படி ஒருமித்த கருத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அறிவிக்கப்படும்.

இதேளை, ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் வெற்றி உறுதியாகவுள்ளது. அது தொடர்பில் நாங்கள் கவனமாக செயற்படுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.