நிலைமை எங்கு போய் முடியுமோ? மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை

Report Print Steephen Steephen in அரசியல்

ஊடகங்கள் மற்றும் மக்கள் பேசும் எந்த வீரரன் 2020 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றாலும் புரட்சிகரமான மாற்றங்களை செய்யாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை தடாகம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரச நிர்வாக சேவை சங்கத்தின் 36வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாடு வீழ்ச்சியடைய நாட்டில் 10, 15 அரசாங்கங்கள் இருப்பதே காரணம். இந்த நிலைமையை உடனடியாக சரி செய்யவில்லை என்றால், நிலைமை எங்கு போய் முடியுமோ தெரியாது.

அரசு பெரியளவில் வருமானம் கிடைக்கும் சில நிறுவனங்களில் மிகப் பெரிய அளவில் ஊழல், மோசடிகள் நடக்கின்றது. ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் அவற்றில் கை வைப்பதில்லை.

இந்த நிறுவனங்களில் நடக்கும் ஊழல், மோசடிகளை நிறுத்தினால், வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய அந்த நிதி போதுமானதாக இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.