ஜெனிவாவில் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி, வெளிவிவகார அமைச்சுக்கு தெரியாமல் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை என நாடாளுமன்ற அவை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. எனினும் சில நாடுகளின் அனுசரணையில் பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையில் மாத்திரம் கையெழுத்திடப்பட்டது எனவும் அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அரச தலைவரான தனக்கு தெரியாமல் ஜெனிவாவில் நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுத்து, ஆவணம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.