ராஜபக்சவினர் பிரம்மாவை போல் பேசுகின்றனர்: சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்

பிரம்மாவை போல் இலங்கையில் அனைத்தையும் தாமே செய்ததாக ராஜபக்சவினர் கூறுவதாகவும் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் நான்கு திட்டங்களை மட்டுமே ஆரம்பித்து முடிக்க முடிந்தது எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சுக்கானது நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வோட்டர்ஸ் எஜ் நிறுவனத்தின் இலாபத்தை நாங்கள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளோம். கொள்முதலுக்கு அமையவே அனைத்தையும் செய்கின்றோம். நாடு ஒரு குடும்பத்திற்கு வரையறுக்கப்படவில்லை. அனைவருக்கும் உரித்தானது. பிரம்மாவை போல் அனைத்தையும் தானே செய்ததாக கூறுகிறார். நான் இதனை கூறவேண்டும் என்று இருக்கவில்லை. மகிந்த ராஜபக்ச 4 திட்டங்களை மட்டுமே ஆரம்பித்து முடித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், சூரியவெவ கிரிக்கெட் மைதானம், சூரியவெவ மாநாட்டு மண்டபம் ஆகிய நான்கு திட்டங்களையே அவர் ஆரம்பித்து முடித்தார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பெலியத்த ரயில் பாதை திட்டம் 1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச 5 வருடங்களுக்கு 28 பில்லியன் ரூபாயை செலவிட்டார். நாங்கள் 64 பில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை செய்துள்ளோம் எனவு சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.