பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது! வாசுதேவ நாணயக்கார

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று எண்ணுவதே அபாயகரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சாதாரண பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தீவிரவாதம் என அடையாளப்படுத்துகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாதத் தடை சட்டத்தை விட அபாயமானது.

இவ்வாறானதொரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என எண்ணுவதே அபாயகரமானது. ஏனெனில் அவசரகால நிலையொன்றின்போதே இவ்வாறானதொரு சட்டத்தை கொண்டுவர முடியும்.

இச்சட்டத்தின் மூலம் அவசரகால நிலையை சாதாரண சட்டமாக மாற்றுவதற்கான முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்களின் நீதிக்கான போராட்டங்கள், பிரசாரங்கள் அனைத்தையும் தீவிரவாதமாக அடையாளப்படுத்தி அவர்களை சிறைவைப்பதற்கான நடவடிக்கைகளே இதன்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவராமல் தடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.